கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரிப்பு


நாட்டில் மேலும் 04 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, கொழும்பு -5 பகுதியைச்  சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 9ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கொட்டாஞ்சேனை பகுதியைச்  சேர்ந்த 70 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்   கடந்த 8ம் திகதி உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு - 13 பகுதியைச்  சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 10ம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், உடதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: