தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சில பகுதிகள்


நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோதமிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, கோதமிபுர 24 ஆம் தோட்டம், கோதமிபுர 78 ஆவது தோட்டம், தெமட்டகொடை – வேலுவன வீதி ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன், பூகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரிமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போலான தெற்கு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

மேலும், மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஒலுவ பிரதேசத்தின் ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, புதிய வீதி, அகரகொட ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை காலை 5 மணி முதல் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: