நாளை முதல் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானம்


இலங்கை போக்குவரத்து சபை நாளை முதல் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதும் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், பஸ் சேவைகள் அட்டவணைக்கமைய  நாளை முதல் செயற்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின்  விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: