இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது என்று உலகிற்கு உரைக்கும் பேரணி

சந்திரன் குமணன்


இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது என்று உலகிற்கு உரைக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எமது தாயக நிலம் நாங்கள் பல நூற்றாண்டுகாலம் வாழ்ந்த பூர்வீக குடி எம்மை சொந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க பேரினவாத அரசுகள் செய்யும் இன விரோத செயற்பாடுகளை கண்டித்து தொடரும் பேரணி யாழ் மாவட்டத்தை  வந்தடைந்தது.

வடக்கு கிழக்கு தாயக பகுதிகளில் நாங்கள் பெரும்பான்மை மக்கள் . தமிழினம் என்றொரு இனம் இத் தீவில் உள்ளனர் என்பதனை சர்வதேசத்தின்  செவிக்கு செல்லும்வரை இன உரிமைக்கான போராட்டம் ஓயப்போவில்லை என்பதனை உணர்த்தி உணர்ச்சி பெருக்கோடு யாழ் நகரை வந்தடைந்தது . 

கட்டுக்கடங்காத காட்டாறு போன்றே பேரணி மக்கள் வெள்ளத்தில் திழைக்கின்றது . வீதியின் இரு மருங்கிலும் ஆதரவு கொடுக்கும் தாயக உறவுகள் முன்னேறி செல்கின்றது பேரணி.
No comments: