இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


தொழில்வாய்ப்புக்காக ஜோர்தானுக்கு சென்று கொரோனா அச்சம் காரணமாக அங்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளான 290 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, அவர்கள் ஜோர்தானின் அம்மானிலிருந்து இன்று அதிகாலை 4.15 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: