காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - பொலிஸார் தெரிவிப்பு


சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான களியாட்டங்களை முன்னெடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருந்துபசார நிகழ்வுகள், திருமண நிகழ்வுகளிலேயே கடந்த நாட்களில் அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், காதலர் தினம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் அனுமதியின்றி களியாட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்களை முன்னெடுப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: