அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு - வர்த்தக அமைச்சு


நாட்டில் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 8ம் திகதி முதல் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அரிசி, பருப்பு, பால்மா, உருளைக்கிழங்கு, சீனி, சவர்க்காரம் உள்ளிட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

No comments: