கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் கைது


முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 3022 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: