நாட்டில் நேற்றைய தினம் 1,625 சுகாதார பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 1,625 சுகாதார பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை நாட்டில் 161,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் திகதி நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: