அக்கரைப்பற்று அபாய கட்டத்தினை கடந்துள்ளது ( அ.லதாகரன் PDHS)கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழ் உள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு , அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று அகிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக காணப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 09 பிரிவுகளையும் தனிமைப்படுத்தில் இருந்து நீக்குவது தொடர்பில் சுகாதார அமைச்சிற்கும், தேசிய கொவிட் செயலணிக்கும் , அம்பறை மாவட்ட அரச அதிபருக்கும் கடந்த 04 நாட்களுக்கு முதல் அறிவித்துள்ளதாகவும் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதால் தனிமைப்படுத்தல் நீக்க சிபார்சு செய்துள்ளதாகவும் அக்கரைப்பற்று அபாய கட்டத்தினை கடந்துள்ளாகவும் தொற்றின் தாக்கம் குறித்த பகுதியில் இருக்கின்றது ஆனால் குறைவாக காணப்டுகின்றதாகவும் குறிப்பிட்டார்.


No comments: