கொரோனா தொற்று - நேற்றைய தினம் மூன்று மரணங்கள் பதிவு


நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில்,கொழும்பு - 14 பகுதியில் 75 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதன் பிறகு அவர் ரம்புக்கன மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் பின்னர் தேசிய தொற்று நோய் நிறுவகத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

அவருடைய மரணத்திற்கான காரணம் குருதி விஷமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் கொவிட் நிமோனியா நிலை காரணமாக உயிரிழந்தார்.

அதேநேரம் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவரும் கொவிட் தொற்றால் கடந்த 6ம் திகதி வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் இருதய நோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.

No comments: