பொகவந்தலாவ பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்டப்பகுதியில் ஒருவருக்கும் பொகவந்தலாவ சீனாகலை டிபி பிரிவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நேற்று (25)மாலை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக இந்த இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் கேகாலை பின்னவலை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சுகதார பாதுகாப்பு முறைமையோடு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர் கொழும்பு பகுதியில் உள்ள உணவகம்ஒன்றில் பணி புரிந்தவர் என்றும்,மற்றொருவர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் பணிபுரிந்து வந்தவர்களென தெரிசிக்கப்படுகிறது.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை கடந்த 23 திகதி மேற்கொள்ளபட்டதுடன், இவர்களோடு தொடர்பினை பேனிவந்த 05 குடும்பங்களை சேர்ந்த 35 பேர் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: