கிழக்கில் அதிகரிக்கும் தொற்றாளர்கள் (விபரம் உள்ளே)கிழக்குமாகாணத்தில் இதுவரை 1230 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்று மாலை 09 மணியுடன் நிறைவடைந்த 12 மணித்தியலாங்களில் கிழக்கில் 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் இன்று மாலை 09 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 12 மணித்தியாலங்களில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் விபரம்

சாய்ந்தமருது - 11
நிந்தவூர் - 01
நாவிதன் வெளி 05
காத்தான்குடி 08
உகன 01


மேலும் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 07 மரணங்கள் நிகழ்ந்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 மரணங்களும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் 05 மரணங்களும் பதிவாகியுள்ளது.


மாவட்டவாரியாக


திருகோணமலை மாவட்டத்தில் 147 தொற்றாளர்களும்


மட்டக்களப்பு மாவட்டத்தில் 226 தொற்றாளர்களும்


அம்பாறை மாவட்டத்தில் உள்ள இரண்டு சுகாதார பிராந்தியங்களில்


அம்பாறை பிராந்திய சுகாதார  வலயத்தில் 31 தொற்றாளர்களும்
கல்முனை 
பிராந்திய  சுகாதார  வலயத்தில் 826 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


கிழக்கு மாகாணத்தில் மொத்தமான 38808 அன்ரிஜன் , பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் கடந்த 24 மணித்தியாலங்களில் 1727 அன்ரிஜன் , பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: