அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா


அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.

பிரதேச சபையின் ஊழியர் ஒருவரின் தந்தைக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் தொற்றுறுதியானதை தொடர்ந்து  குறித்த ஊழியருக்கு இன்று மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து காரைதீவு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட 65 ஊழியர்களுக்கு இன்றைய தினம் அன்டிஜன்ட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நிதிப் பிரிவில் கடமையாற்றும் நபரொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து அங்குள்ள நிதி மற்றும் நிர்வாகப் பிரிவுகள் இன்றைய தினம் மூடப்பட்டன.

No comments: