நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி 13 ஆயிரத்து 224 பி.சி.ஆர் சோதனைகள் நேற்று நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் 13 இலட்சத்து 89 ஆயிரத்து 831 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: