வீட்டுக் கூரையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருளுடன் வீட்டு உரிமையாளர் கைது


கிளிநொச்சி விவேகானந்தா நகரப் பகுதியில் வீட்டுக் கூரையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ 456 கிராம் கஞ்சா போதைப் பொருள்  கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து  இச்சுற்றிவளைப்பு  முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: