ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை


பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாதுகாப்பு முகக்கவசங்களை  வழங்கும் செயற்திட்டத்தை முன்னெடுக்குமாறு  ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம்  கோரிக்கை முன்வைத்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இதனை  நடைமுறைப்படுத்துமாறு ஆசிரியர் சங்கத்தின்  செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்

முதற்கட்டமாக மேல் மாகாணத்தில்  இந்த   திட்டத்தை ஆரம்பிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பெப்ரவரிமாதம் 15 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம்  மீள்பரிசீலனை   செய்ய வேண்டும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: