இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பம்


இடைநிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொல்கஹவலை, குருணாகலை பிரதேசங்களுக்கான மந்த கதியிலான ரயில் சேவைகள் மற்றும் காலி குமாரி, ருஹுணு குமாரி ஆகிய ரயில் சேவைகள் நாளை மறுதினம் முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன், அளுத்கம அலுவலக ரயில், பெலியத்த விரைவு ரயில், அளுத்கம ரயில் சேவை, புத்தளம் ரயில் சேவை, அனுராதபுரம் தபால் ரயில் ஆகியனவும், நாளை மறுதினம் முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், எதிர்வரும் 8ம் திகதி முதல் மேலும் 5 ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

No comments: