இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 300 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்படி, கட்டார், பஹ்ரைன், தென் கொரியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டாரிலில் இருந்து 45 பேரும், பஹ்ரைனிலிருந்து 67 பேரும், தென்கொரியாவில் இருந்து 95 பேரும், ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து 47 பேரும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்
குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: