நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 557 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 555 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இத்தாலியில் இருந்து இலங்கை வந்த தலா ஒருவருக்கும் நேற்றைய தினம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 43,856 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7,493 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,155 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: