வெளிநாட்டுப் பணியாளர்களின் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு இணையத்தள வசதி


வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்கள், தமது முறைப்பாடுகளை முன்வைக்க இணையத்தளத்தின் ஊடாக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர், தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு வேலைவாய்புப் பணியகத்தின்  www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  புலம்பெயர் தொழிலாளர்களின் கடவுச் சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடு என்பவற்றை முன்வைத்து, சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றதன் பின்னர், முறைப்பாட்டாளர்களுக்கு  SMS ஊடாக  அறிவிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: