நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 511 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸி லிருந்து 340 பேர், கட்டாரிலிருந்து 126 பேர், இந்தியாவிலிருந்து 45 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


No comments: