இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 284 இலங்கையர்கள்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இலங்கையர்கள்  இன்று  முற்பகல் 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டுபாயில் இருந்து 138 பேரும் கட்டாரில் இருந்து 114 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: