கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை


இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra - Zeneca) தடுப்பூசியை சுகாதார பிரிவினருக்கும் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தான் மகிச்சியடைவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் விராஜ் அபேசிங்கவால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தான் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த பிரார்த்திப்பதாக சுகாதார அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: