மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் திறப்பது குறித்து ஆய்வு


பெப்ரவரி 15ம் திகதிக்கு முன்னர் மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு உள்ள இயலுமை குறித்து ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் போது ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: