கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்
கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நேற்றிரவு 7.30 மணியளவில் புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றும் குறித்த ஊழியர் கடந்த 13 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 17ம் திகதி, கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
43 வயதான குறித்த தொற்றாளர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
No comments: