நாடாளுமன்ற அமர்வுகளை இரு நாட்களுக்கு நடாத்த தீர்மானம்
நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: