நில அதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பாரியளவில் பாதிப்பு கிடையாது – மஹிந்த அமரவீர
கண்டி – திகன பகுதியில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளினால் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்,
அண்மைக் காலங்களில் குறித்த பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளில் 2 ரிச்டர் அளவுக்கும் குறைவாகவே நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்புகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான அதிர்வுகள் இயற்கையாக உருவாகுவதாகவும் எனினும், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் முன்னெடுக்கப்படும் சுன்னாம்பு அகழ்வு நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் நிபுணர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, புவிச்சரிதவியல் மற்றும் அளவை சுரங்கப் பணியகத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: