புகையிரத பொதி சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்


புகையிரத சேவைகள் இடம்பெறும் பகுதிகளுக்கான பொதி விநியோக சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொவிட் -19 கொரோனா தொற்று நெருக்கடி நிலைமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 சுகாதார பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புகையிரத பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் புகையிரத சேவைகளை அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் சுகாதாரப் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்காக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

No comments: