பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானம்


புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் இணைத்துக் கொள்ளாதிருக்கவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: