அத்தியாவசிய உணவுப் பொருட்களின் நிர்ணய விலை தொடர்பிலான அறிவிப்பு


நிர்ணய விலையில் பாவனையாளர்களுக்கு பொருட்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி மற்றும் டின் மீன் உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களுக்கே இவ்வாறு நிர்ணய விலை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, நிர்ணய விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கக்கூடிய மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து விலைமனுக்கள் கோரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும், நிர்ணய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: