மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கனகராசா சரவணன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 315 பேருக்கு இன்று சனிக்கிழமை (02) மேற்கொண்ட  அன்டிஜன் பிரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 10 நாட்களில் காத்தான்குடி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் 76 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட  தொற்றாளர்களின் எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளதுடன் அங்கு தொடர்ந்து தீவிரமான சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து,காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன்,மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: