தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட சில பகுதிகள்


நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக
கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மின்னான, போபத்தெல்ல, வெலேகொட, அஸ்கஹுல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 675 தொடவத்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கொன கிழக்கு மற்றும் மங்கொன மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

No comments: