தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை


கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டு

முகத்தை முழுவதுமாக மறைக்க கூடிய முக கவசம் மற்றும் கருப்பு ஆடை அணிந்து வந்த இருவர் நிதி நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: