அம்பாறை சாகாமம் பகுதியில் இயற்கையாக உருவாகும் சுற்றுலாத் தளம்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்த மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள பழமை பொருந்திய வரலாற்றுச் சின்னங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அம்பாறை சாகாமக் குளம் விளங்குகின்றது.
குறித்த பிரதேச மானது அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவையும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவையும் இணைக்கும் எல்லை பகுதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குளத்தில் எஞ்சிய நீரானது குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இயற்கையக அமையப் பெற்ற மலைப்பகுதியினுாடாக வழிந்தோடுகின்றது.
இவ்வாறு வழிந்தோடும் போது குறித்த பகுதி நீர் வீழ்ச்சி போன்று மிக அழகாக காட்சியளிக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் பல சுற்றுலா தளங்கள் காணப்படும் வேளையில் சாகாமம் பகுதியில் இவ்வாறான பகுதிக்கு அதிகளவான மக்கள் கொவிட் 19 நடைமுறைகளை பின்பற்றி வருகை தருவதனை காணக் கூடியதக உள்ளது.
No comments: