நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 594 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

வேலைவாய்ப்புக்காக குவைத் சென்றிருந்த மற்றும் பல்வேறு துன்புறுத்தல்களால் இலங்கைக்குத் திரும்ப முடியாத 376 இலங்கையர்களும் டுபாயில் இருந்து 90 பேர், ரியாத்தில் இருந்து 50 பேர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 41 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்தததும் விமான நிலையத்தில் இவர்களுக்கு  பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.No comments: