மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்


மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்முதற்கட்ட நடவடிக்கை கொழும்பு – ஒருகொடவத்தையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் தொலைதூர நோக்கு கொள்கையின் பிரகாரம், நடுத்தர குடும்பங்களுக்கு ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தொலைதூர நோக்கு கொள்கையின் ஊடாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு, வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக, மூவாயிரம் நடுத்தர குடும்பத்தினருக்கு, குறித்த வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: