தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்


கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை முதலான பொலிஸ் அதிகார பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின், வத்தளை பொலிஸ் அதிகார பிரிவின் வெலிக்கடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவ வத்த, கிரிபத்கொடை பொலிஸ் அதிகார பிரிவின் ஹுணுப்பிட்டி, வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் அதிகார பிரிவின் தல்துவ கிராம சேவகர் பிரிவின் எம்.சி வீடமைப்பு யோசனைத் திட்டம் என்பன இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம், கோத்தமிபுர தொடர்மாடி குடியிருப்பு, பொரளை – கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.

No comments: