இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் தங்கியிருந்த 355 இலங்கையர்கள் இன்று  நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக COVID – 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கட்டாரிலிருந்து 30 பேரும், மாலைதீவிலிருந்து 35 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: