மட்டக்களப்பில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த 27 பேரில் 16 பேர் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும்,4 பேர் ஓட்டமாவடி  சுகாதார  வைத்திய அதிகாரி பிரிவையும்,3 பேர் கோரளைப்பற்று மத்தி மற்றும் மட்டக்களப்பு  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும்,ஒருவர் களவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டார்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளதுடன் 183 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 26 ரெப்பிட் என்டிஜன்ட் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.No comments: