நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வௌிநாடுகளில் தங்கியிருந்த 358 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 148 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் 48 பேர் ஜப்பானில் இருந்தும் நாடு திரும்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: