குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்


நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்காக குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் முதலான நாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய் உற்பத்தி குறைவடைந்தமையால், தற்போது நாட்டில் தேங்காய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேங்காய் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: