மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுப்பு


எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துளளார்.

குறித்த நடவடிக்கை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கு போது அவர் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், எதிர்வரும் 28ம் திகதி போயா விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிகமானோர் மேல் மாகாணத்த விட்டு வெளியேற சாத்தியம் உள்ளமையினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments: