டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேலும் ஒரு தாதியருக்கு கொரோனா
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த மேலும் ஒரு தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (20.01.2021) விடியற்காலை வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவளை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் தொற்றுக்குள்ளான தாதியரோடு தொடர்பினை பேணிவந்த 09 தாதியர்கள் மற்றும் 06 உதவியாளர்கள் உட்பட 15 பேர் 14 நாட்கள் சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரையிலும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்துவரும் உத்தியோகதத்ர்களில் 50ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: