வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்களை அரச செலவில் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை


கொரோனா அச்சநிலை காரணமாக பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள ​வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்களை அரச செலவில் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஸபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கமைய பணியாளர்களின் விமானப் பயணச்சீட்டு  விலையின் 50 வீதத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும் என வெளிநாட்டு   வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ஏனைய இலங்கையர்களுக்கு சலுகை அடிப்படையில் விமான பயணச்சீட்டுக்களை வழங்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் 22,483 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு  எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: