நாடு திரும்பிய 423 இலங்கையர்கள்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 423 இலங்கையர்கள் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி இவர்கள் 9 விமானங்களின் மூலமாக கட்டுநாயக்க,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாடு திரும்ப முடியாத நிலையில், பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைய, அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொழில் நிமித்தம் கட்டார் நாட்டிற்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்த 245 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கட்டார் நாட்டின் தோஹா நகரில் இருந்து இரண்டு விமானங்கள் ஊடாக 93 பேரும் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபியில் இருந்து 66 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்தததும் விமான நிலையத்தில் இவர்களுக்கு  பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments: