எதிர்வரும் 23ம் திகதி முதல் விமான நிலையங்கள் மீள் திறப்பு


எதிர்வரும் ஜனவரி மாதம் 23ம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும்,சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும்,கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: