வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் பலி


நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் நேற்றைய நாளில் 5 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், முன்னதாக விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் பாதசாரிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கடந்த 24 மணிநேரத்தில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஐவர் மற்றும்  பாதசாரிகள் இருவர் உட்பட மேலும் ஒருவர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: