பராக்கிரம சமுத்திரத்தில் வீழ்ந்த பேருந்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி


பொலன்னறுவை பகுதியில் பராக்கிரம சமுத்திரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை லங்காபுர  பகுதியில் தொழிலாளர்கள் சிலர் பயணித்த பேரூந்து ஒன்று இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: