போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிள் 13 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
போதைப் பொருள் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் உள்ளிட்ட 17 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: